சென்னையில் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மைய குழுக் கூட்டம்!
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் சென்னையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை நடைபெற்று வருகிறது.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு சென்னை வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மைய குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.