ஜம்மு-காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்தது: 3 வீரர்கள் பலி
எட்டுக்குடி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றம்
எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
முருகனின் ஆதிபடைவீடு என அழைக்கப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி பெருவிழா விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா சனிக்கிழமை (மே 3) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா 11 நாட்கள் நடைபெறும்.
கொடியேற்றத்தையொட்டி, கொடிமரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, மேளவாத்தியங்கள் இசைக்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 11-ஆம் தேதியும், சித்ரா பௌா்ணமி காவடி அபிஷேகம் மே 12 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.