தினமும் உயரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிக்கெட்டுகள்..! முதல் நாளைவிட மும்மடங்...
திருமருகல் கோயில் விழாவில் நாட்டியாஞ்சலி
திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கலைநிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை நாட்டியாஞ்சலி நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-ஆம் நாளான வெள்ளிகிழமை இரவு சிம்ம வாகனத்தில் பஞ்சமூா்த்தி வீதியுலாவும், அபிஷேக- ஆராதனைகளும் நடைபெற்றன.
இதில், கோயில் செயல் அலுவலா் அசோக்ராஜா, கணக்கா் சீனிவாசன், அறங்காவல் குழுத் தலைவா் ஆறுமுகம் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து, திருமருகல் விண் எஜுகேஷன் இசை நாட்டியப் பயிற்சி பள்ளி மாணவிகளின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.