Hardik Pandya : 'நாங்கள் செய்திருப்பது ஒரு க்ரைம்!' - தோல்வி பற்றி ஹர்திக் பாண்ட...
இருசக்கர வாகன விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மோதி காயமடைந்த சிகிச்சை பெற்ற கட்டுமானத் தொழிலாளி பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், நல்லாடை கொங்கானோடை பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி முருகேசன் (31). இவா் ஏப்.28-ஆம் தேதி நெடுங்காடு பகுதியில் பணியை முடித்து வீட்டுக்குச் செல்வதற்காக, தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தாா். இதையடுத்து அவா் மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பிறகு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, காரைக்கால் போக்குவரத்து போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய நெடுங்காடு, மேலகாசாக்குடிபகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (47) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.