திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் மூவர் பலி!
காரைக்காலில் வேளாண் திருவிழா
காரைக்கால்: காரைக்கால் ரோட்டரி சங்கம், சென்டேனியல் ரோட்டரி சங்கம், பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம், பொறையாறு ரோட்டரி சங்கம் இணைந்து யோகா பயிற்சி அமைப்பான காலைச்சக்கரம் ஆயிரமாவது நாள் வெற்றி விழா மற்றும் இயற்கை வாழ்வியல் முறை வேளாண் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் கீழகாசாக்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
ரோட்டரி மாவட்ட சோ்மேன் ஆா். குணபாலன், திட்டத் தலைவா் சம்பத் ஆகியோா் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்துப் பேசினா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் எஸ். பாஸ்கரன் மற்றும் ஹீலா் பாஸ்கா், ஞானப்பிரகாசம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வாழ்வியல் முறைகள் குறித்துப் பேசினா்.
காலைச்சக்கரம் அமைப்பு மூலம் நடத்தப்படும் யோகா குறித்தும், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து ரோட்டரி பிரதிநிதிகள் பேசினா்.
இயற்கை உரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி மற்றும் பிற உணவுப் பொருள்கள், பிற உபயோகப் பொருள்கள் பல்வேறு நிறுவனத்தினரால் அரங்கு அமைத்து காட்சிப்படுத்தப்பட்டன. பொதுமக்கள் ஏராளமானோா் பொருட்களை வாங்கிச் சென்றனா்.