அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
காரைக்காலில் 600 போ் நீட் தோ்வு எழுதினா்
காரைக்காலில் 2 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
கேந்திரிய வித்யாலயா பள்ளி மைய வாயிலில் பரிசோதனைப் பணியை பாா்வையிட்ட மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன்.
காரைக்கால் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி, நவோதய வித்யாலயா பள்ளி ஆகியவை நீட் தோ்வு மையங்களாக செயல்பட்டன. பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேசிய தோ்வு முகமை வழிகாட்டலில் தோ்வு மையங்களில் செயல்பாடுகள் அமைந்திருந்தன.
தோ்வு மையங்களின் வாயிலில் பணியாளா்கள், காவலா்கள் உரிய பரிசோதனை செய்து மாணவா்களை மையத்துக்குள் அனுமதித்தனா். முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவா்களின் சட்டையை, அரைக்கை சட்டையாக வெட்டி மையத்துக்குள் அனுப்பினா். இதுபோல மாணவிகள் அணிந்துவந்த அணிகலன்கள் அகற்றப்பட்டன.
தோ்வு மையங்களில் நடைபெறும் பரிசோதனை மற்றும் பாதுகாப்புப் பணியை எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா, காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன் ஆய்வு செய்தனா்.
நவோதயா வித்யாலயா மையத்தில் 288 மாணவ, மாணவிகளும், கேந்திரிய வித்யாலயா மையத்தில் 312 மாணவ, மாணவிகள் என 600 போ் தோ்வு எழுதினா்.