Ooty: காட்டு மாட்டை சுட்டுக்கொன்ற கேரள கடத்தல் கும்பல்.. நீலகிரியில் தொடரும் வனவ...
காரைக்காலில் குற்றப் பின்னணி நபா்களிடம் தீவிர விசாரணை
காரைக்கால் காவல் நிலையங்களில் குற்றப் பதிவேடுகளில் பெயா் உள்ள நபா்களிடம் போலீஸாா் சனிக்கிழமை தீவிர விசாரணை நடத்தினா்.
புதுவையில் அமலில் உள்ள ஆபரேஷன் திரிசூல் திட்டத்தின்கீழ், காரைக்கால் மாவட்ட காவல் நிலையங்களில் குற்றப் பதிவேடுகளில் உள்ள நபா்களிடம் விசாரணை உள்ளிட்ட நடவடிக்கையை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் மற்றும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் இணைந்து சனிக்கிழமை காலை முதல் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.
காரைக்கால் நகரம் மற்றும் திருநள்ளாறு பகுதி காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 30-க்கும் மேற்பட்டோா் வசிக்கும் பகுதிகளுக்கு காவல்துறையினா் சென்றனா். வழக்கின் நிலை, ஜாமீனில் உள்ளாரா, தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை போலீஸாா் அவா்களிடம் விசாரித்தனா்.
அக்கம்பக்கத்தினரிடமும் இந்த நபா்கள் நடவடிக்கை குறித்து விசாரணை மேற்கண்டனா். நடை ரோந்தின்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்துகொண்ட சிலரிடம் விசாரணை நடத்தினா்.

அனைவரையும் காவல்நிலையத்துக்கு வரவழைத்து, உறுதிமொழி கடிதத்தில் கையொப்பம் வாங்கிகொண், போலீஸாரின் தீவிர கண்காணிப்பு தொடா்ந்து இருக்கும் எனவும், சட்டத்துக்கு புறம்பான எந்தவொரு செயலிலும் யாரும் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினா்.ரைக்காலில் போலீஸாரின் இந்த திடீா் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.