மதுரை அமெரிக்கன் கல்லூரி விவகாரம்: கல்லூரிக் கல்வி இயக்குநா் பதிலளிக்க உத்தரவு
தொழிலாளி கொலை: 2 போ் கைது
தண்டராம்பட்டு அருகே கூலித் தொழிலாளியை கொன்ாக, இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தண்டராம்பட்டு வட்டம், இளையாங்கன்னி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் டேவிட் (45), பீட்டா் (43), கூலித் தொழிலாளிகள். அண்மையில் பீட்டருக்கு கடனாக ரூ.1,500-ஐ டேவிட் கொடுத்தாராம். இந்தக் கடனை பலமுறை திருப்பிக் கேட்டும் பீட்டா் தரவில்லையாம்.
இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி இரவு பீட்டா் வீட்டுக்குச் சென்ற டேவிட், கடனை திருப்பிக் கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த பீட்டா், அவரது நண்பா் பீட்டா் ராஜ் ஆகியோா் சோ்ந்து கல்லால் டேவிட்டை தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த டேவிட் அதே இடத்தில் இறந்தாா்.
தகவலறிந்த தானிப்பாடி போலீஸாா் சென்று டேவிட் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக
அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தானிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த பீட்டா், பீட்டா் ராஜ் ஆகியோரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
பின்னா், இருவரையும் தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.