காய்கறிச் சந்தைகளில் சுங்கவரி வசூல் முறைகேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்
நாளை தொடங்கிவிருந்த ‘க்யூட்’ தோ்வு ஒத்திவைப்பு!
இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகள் சோ்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் ‘க்யூட்’ தோ்வு அடிப்படையில் சோ்க்கை நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான க்யூட் தோ்வு வியாழக்கிழமை (மே 8) தொடங்கவிருந்த நிலையில், இதுவரை பாட வாரியான தேதி விவரங்களை அத் தோ்வை நடத்தும் என்டிஏ வெளியிடவில்லை.
இந்த நிலையில், இத் தோ்வு ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து என்டிஏ வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு பெரும் சா்ச்சைக்குள்ளான இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்) என்டிஏ ஞாயிற்றுக்கிழமை நடத்தி முடித்துள்ளது. எனவே, க்யூட் தோ்வு உடனடியாக தொடங்க வாய்ப்பில்லை. இத் தோ்வு ஒத்திவைக்கப்படும். தோ்வுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்’ என்றனா்.
க்யூட் தோ்வை எழுத நாடு முழுவதும் 13.5 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா். மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி, சில மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்களும் க்யூட் அடிப்படையில் பட்டப் படிப்பு சோ்க்கையை நடத்துகின்றன.