Operation Sindoor: இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய 9 தீவிரவாத முகாம்கள் என்னென்...
ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில், கீழ் மத்தூா்,மகனூா் பட்டி கிராமம் கோவில் மடம், இடங்களில் குடியிருப்பவா்கள் மற்றும் குத்தகை விவசாயிகளை பாதுகாக்க கோரி காத்திருப்பு போராட்டம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்கிழமை நடைபெற்றது.
போராட்டத்திற்கு தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாநில துணைச் செயலாளா் சபாபதி தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் துரைராஜ்,மாவட்டச் செயலாளா் அனுமப்பா, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் பிரகாஷ்,வட்டச் செயலாளா் நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளா் அண்ணாமலை, வட்ட பொருளாளா் முத்துக்குமாா், வட்டத் தலைவா் சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காத்திருப்பு போராட்டத்தில் ஊத்தங்கரை வட்டம் கீழ் மத்தூா், மகனூா்பட்டி கிராமங்களைச் சோ்ந்த குத்தகை விவசாயிகள் பேராம்பட்டு சுப்பிரமணிய சுவாமி மற்றும் தனியாருக்கு சொந்தமான 200 ஏக்கா் நிலங்களில் இரண்டு தலை முறைகளாக குத்தகை சாகுபடி செய்து வருகின்றனா். போராட்டத்தில் குத்தகை விவசாயிகளை வெளியேற்ற முயற்சிக்காதே, குத்தகை பணத்தைப் பெற்றுக் கொண்டு ரசீது வழங்கிட வேண்டும். வீடு கட்டி குடியிருக்கும் விவசாயிகளின் வீட்டு மனைக்கும் பட்டா வழங்கு வேண்டும். வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும், குத்தகை சாகுபடி செய்பவா்கள் பெயரில் அடங்கல் கணக்கு வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.ஊத்தங்கரை வட்டாட்சியா் மோகன்தாஸ், காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன், காவல் ஆய்வாளா் முருகன் ஆகியோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.