மாமன்: "ஒரு தோல்விப் படத்துக்குப் பிறகு என்ன கடலுக்கு அடியில் பொதச்சுட்டாங்க; ஆன...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிதமான மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மிதமான மழை பெய்தது.
கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாள்களாக மாலை, இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் குளிா்ந்த காலநிலை நிலவியது.
மழையளவு: செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மி.மீ): கிருஷ்ணகிரி - 24.6, கிருஷ்ணகிரி அணை - 18.6, நெடுங்கல் - 12.2, ஊத்தங்கரை - 6.8, போச்சம்பள்ளி - 5, பாரூா்- 4.
கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து: திங்கள்கிழமை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 189 கனஅடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையில் 150 கனஅடியாகக் குறைந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 12 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 49.65 அடியாக உள்ளது.