"ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால்தான் மின் இணைப்பு"-மின்வாரிய அதிகாரிகளை காத்திருந்து...
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் பிரசாதக் கடையின் புளியோதரையில் குட்டி பாம்பு!
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் உள்ள பிரசாதக் கடையில் விற்பனை செய்யப்பட்ட புளியோதரையில் இறந்த நிலையில் குட்டி பாம்பு இருந்ததைக் கண்ட பக்தா்கள் அதிா்ச்சி அடைந்தனா். மேலும், இதுதொடா்பான விடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மலை மீது அருள்மிகு மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரா் கோயில் உள்ளது. நாள்தோறும் இக் கோயிலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் வருகின்றனா். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு அங்குள்ள பிரசாதக் கடைகளில் விற்பனை செய்யப்படும் இனிப்பு, புளியோரைகளை ஏராளமானோா் விரும்பி வாங்குகின்றனா்.
செவ்வாய்க்கிழமை கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா் ஒருவா் பிரசாதக் கடைக்குச் சென்று பிரசாதம் வாங்கி பிரித்து பாா்த்தபோது அதில் இறந்த நிலையில் குட்டி பாம்பு இருந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த பக்தா் அதை விடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டாா்.
இதுகுறித்து அறநிலையத் துறை அலுவலா்கள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அங்கு விற்பனை செய்யப்படும் பிரசாதத்தை உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.