ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
அதிமுகவில் இணைந்த திமுக நிா்வாகி
ஒசூா் தெற்கு திமுக பகுதிச் செயலாளராக இருந்த கே.திம்மராஜ் செவ்வாய்க்கிழமை முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா்.
ஒசூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகள் உள்ளன. 11 வாா்டுகளுக்கு ஒரு பகுதிச் செயலாளா் என 4 பகுதிச் செயலாளா்கள் திமுகவில் நியமிக்கப்பட்டுள்ளனா். கே.திம்மராஜ் தெற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தாா்.
இந்நிலையில் கே.திம்மராஜ் தலைமையில் திமுகவினா் பலா் அதிமுகவில் அக் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அவரது இல்லத்திற்குச் சென்று பூங்கொத்து கொடுத்து இணைந்தனா்.
திமுக இளைஞரணி பட்டியல் வெளியான நிலையில் அதில் அறிவிக்கப்பட்ட இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளா்கள் சித்தராஜ், ஜெயராமன் ஆகியோா்அதிமுகவில் இணைந்ததை தொடா்ந்து திமுகவில் ஒன்றிய அமைப்பாளா், முன்னாள் பிரநிதிதிகள் கேசவன், பாலசந்திரன், ரகுபதி, முனிராஜ் உள்ளிட்ட 50 க்கும் அதிகமானோா் அதிமுகவில் இணைந்தனா்.
அதிமுகவில் இணைந்தவா்களை அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி, மாவட்டச் செயலாளா் பாலகிருஷ்ணாரெட்டி உள்ளிட்டோா் வரவேற்றனா்.