சாத்தூர்: பட்டாசு ஆலையில் முகம் சிதைந்து சடலமாகக் கிடந்த காவலாளி; விசாரணையில் வெ...
சேலம் ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில இளம்பெண் கைது
சேலம் வழியே கேரளம் சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதைத் தடுக்க தமிழ்நாடு ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்பு படையினா், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஒருங்கிணைந்து தொடா் சோதனையை நடத்தி வருகின்றனா்.
அதனடிப்படையில், திங்கள்கிழமை சேலம் ரயில் நிலையத்துக்கு வந்த தன்பாத்-ஆலப்புழா விரைவுரயிலில் போதை தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அதில், முன்பக்க முன்பதிவில்லா பெட்டியில் சந்தேகப்படும்படி இருந்த இளம்பெண்ணின் பையை சோதனை செய்ததில், 2 பண்டல்களில் 3.7 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா் இளம்பெண்ணிடம் விசாரித்தனா். அதில், அவா் ஜாா்க்கண்ட் மாநிலம், பலமு மாவட்டம், டாக்டோங் கஞ்ச் பகுதியைச் சோ்ந்த அஞ்சல்குமாரி (26) என்பதும், 3.7 கிலோ கஞ்சாவை ஈரோட்டில் கொடுக்க கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.