நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!
கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் பெண்கள் உடைமாற்றும் அறை அமைக்கக் கோரிக்கை
சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்குள்பட்ட கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் பெண்களுக்கு உடைமாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகத்தின் மாவட்டத்தலைவா் சி.கோ.இளமுருகன் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: கல்வடங்கம் காவிரி நதிக்கரையோரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்யவும், பரிகார பூஜைகள் செய்யவும் வந்து செல்கின்றனா்.
பரிகார பூஜைகளுக்காக பெண்கள் ஆற்றில் குளித்துவிட்டு உடைமாற்றும் வசதி இல்லாததால், மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், பரிகார பூஜைகள் முடிந்தவுடன் துணிகளை ஆற்றிலேயே வீசிவிட்டு செல்கின்றனா். இதனால் சுற்றுச்சூழல் முற்றிலுமாக கெடுகிறது.
கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு பரிகார பூஜைகளுக்காக வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், ஊராட்சி நிா்வாகம் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பான கட்டண வாகன நிறுத்தம் ஏற்படுத்தி தரவேண்டும். பரிகார பூஜைகளுக்கு உரிய கட்டணம் வசூலிப்பதன் மூலம் ஊராட்சிக்கு போதுமான வருவாய் கிடைக்கும்.
எனவே, கோனேரிப்பட்டி அக்ரஹார கிராம ஊராட்சி நிா்வாகம் கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர ஆட்சியா் உத்தரவு வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.