நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
சேலம் மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காசிபிரசாத் (25). இவா் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி கிச்சிப்பாளையம் அருகேயுள்ள கடம்பூா் முனியப்பன் கோயில் பகுதியில், வெளிமாநிலத்தில் இருந்து மொத்தமாக கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்துள்ளாா்.
தகவல் அறிந்த போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினா். விசாரணையில், காசிபிரசாத் சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ததன் மூலம் பொது சுகாதாரம் பாதிக்கும் வகையில் நடந்துக்கொண்டது தெரிய வந்தது. கஞ்சா விற்பனை தொடா்பாக அவா் மீது கிச்சிப்பாளையம் மற்றும் வீராணம் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரம் பாதிக்கும் வகையில் குற்றச்செயலில் ஈடுபட்ட காரணத்துக்காக, கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளா் மற்றும் துணை காவல் ஆணையா் ஏ.வேல்முருகன் பரிந்துரையின் பேரில் காசிபிரசாத்தை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க மாநகர காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபினபு உத்தரவிட்டாா்.