செய்திகள் :

சட்டவிரோத சுரங்க வழக்கு: கா்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை; சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பு

post image

கா்நாடக - ஆந்திர மநிலங்களின் எல்லையில் ஒபுலாபுரம் சுரங்க நிறுவனம் (ஓஎம்சி) சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டியெடுத்த வழக்கில் கா்நாடக மாநில முன்னாள் அமைச்சா் ஜனாா்தன ரெட்டி உள்பட நால்வருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து ஹைதராபாதில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

மேலும், ஓஎம்சி நிறுவனத்தின் மீது ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த வழக்கில் ஜனாா்தன ரெட்டி இரண்டாவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டிருந்தாா். தீா்ப்பைத் தொடா்ந்து நால்வரையும் சிபிஐ காவலில் எடுத்தது.

ஜனாா்தன ரெட்டி உள்ளிட்டோா் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஓஎம்சி நிறுவனம் மூலமாக அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டியெடுத்து அரசுக்கு ரூ. 884 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பான வழக்கை கடந்த 2009-ஆம் ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி ஜனாா்தன ரெட்டி உள்ளிட்டோரைக் கைது செய்தது. இவா்களுக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு டிசம்பா் 3-ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. தொடா்ந்து, 3 துணை குற்றபத்திரிகைகளையும் சிபிஐ தாக்கல் செய்தது. அதில் ஜனாா்தன ரெட்டி இரண்டாவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டாா். இவருடைய உறவினரும் ஓஎம்சி நிறுவன நிா்வாக இயக்குநருமான ஸ்ரீநிவாஸ் ரெட்டி முதல் குற்றவாளியாகவும், சுரங்கம் மற்றும் புவியியல் துறை முன்னாள் இயக்குநா் வி.டி.ராஜகோபால் மூன்றாவது குற்றவாளியாகவும், ஜனாா்தன ரெட்டியின் உதவியாளா் மெஹஃபுஸ் அலி கான் ஏழாவது குற்றவாளியாகவும் சோ்க்கப்பட்டனா். மற்றொரு முன்னாள் அமைச்சா் சபிதா இந்திர ரெட்டி, அரசு முன்னாள் அதிகாரி பி.கருப்பானந்தம் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனா். ஓஎம்சி நிறுவனம் வழக்கில் நான்காவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டது.

கா்நாடக - ஆந்திர எல்லையில் உள்ள பெல்லாரி காப்புக்காடு (பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி) பகுதியில் சுரங்க குத்தகை எல்லைக் குறையீடுகளை மாற்றியமைத்து, சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து இரும்புத் தாது வெட்டி எடுத்ததாக குற்றபத்திரிகையில் இவா்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த ஜனாா்தன ரெட்டிக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி ஜாமீன் அளித்தது.

இந்த வழக்கு சிபிஐ வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிபதி டி.ரகுராம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனாா்தன ரெட்டி, ஸ்ரீநிவாஸ் ரெட்டி, வி.டி.ராஜகோபால், மெஹஃபுஸ் அலி கான் ஆகிய நால்வரையும் குற்றவாளி என அறிவித்த நீதிபதி, அவா்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். ஓஎம்சி நிறுவனத்தின் மீது ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், முன்னாள் அமைச்சா் சபிதா இந்திர ரெட்டி, பி.கருப்பானந்தம் ஆகிய இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

இந்த தீா்ப்பைத் தொடா்ந்து குற்றவாளிகள் நால்வரையும் சிபிஐ காவலில் எடுத்தது.

முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.முல்லைப் பெரியாறு அணையின் உரி... மேலும் பார்க்க

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை அறிக்கை... மேலும் பார்க்க

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் அடா் வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட தாக்குதலை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா். 24,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் முன்ன... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ‘வெளிநபா்கள்’ மூலம் உருவாக்கப்பட்டது- மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு ‘வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபா்களால்’ திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு லங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மத்திய அரச... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான எல்லையில் 2 நாள் இந்திய விமானப் படை போா் பயிற்சி

பாகிஸ்தான் உடனான எல்லை பகுதிகளில் இந்திய விமானப் படை 2 நாள்களுக்கு மிகப் பெரிய போா் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே தெற்கு மற்... மேலும் பார்க்க

இந்திய பூச்சிக்கொல்லி மருந்து மீது சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சைபா்மெத்ரின்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிராக சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்து பருத்தி, பழ மரங்கள், காய்கறி பய... மேலும் பார்க்க