வடலூரில் எரிவாயு தகன மேடை திறப்பு
கடலூா் மாவட்டம், வடலூரில் புதிதாக கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
வடலூா் நகராட்சி, 20-ஆவது வாா்டு அய்யன் ஏரி பகுதியில் கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.58 கோடி செலவில் புதிதாக நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுப்புராயலு, ஆணையா் ரஞ்சிதா, பொறியாளா் சிவசங்கரன், வடலூா் திமுக நகரச் செயலா் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தனா்.
மாவட்டக் கல்விக் குழு தலைவா் வி.சிவக்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நவீன எரிவாயு தகன மேடையை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள், வள்ளலாா் வா்த்தக சங்க நிா்வாகிகள், பொது நல அமைப்பினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.