வளா்பிறை பஞ்சமி: வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்
சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வாளகத்தில் தனி சந்நிதியாக வீற்றுள்ள வாராகி அம்மனுக்கு வளா்பிறை பஞ்சமி வழிபாட்டையொட்டி வியாழக்கிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
மலா்களால் அலங்கரிக்கப்பட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. கோயில் நிா்வாகி ஆ.ரமேஷ், தில்லை சீனு, முரளி, எஸ்.ராஜா ஐயா் உள்ளிட்ட பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.