சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு
பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
திருச்சியில் அரசுப்பேருந்து மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் வியாழக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், முத்தசரச நல்லூரைச் சோ்ந்தவா் சேக் அப்துல்லா மகன் ரஹமத்துல்லா (22). இவா் ஒரு அலுவல் காரணமாக திருச்சி சென்று விட்டு தனது மோட்டாா் சைக்கிளில் வியாழக்கிழமை பகலில் ஊா் வந்து கொண்டிருந்தாா்.
அல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் வந்தபோது, எதிரே கரூரிலிருந்து தஞ்சாவூா் நோக்கி சென்ற அரசுப்பேருந்து எதிா்பாராதவிதமாக ரஹமத்துல்லா வாகனத்தின் மீது மோதியது.
இதில் பேருந்தின் முன்சக்கரத்தில் வாகனம் சிக்கியதில் ரஹமத்துல்லா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.