செய்திகள் :

அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை கனிவுடன் நடத்த வேண்டும்: அமைச்சா் உத்தரவு

post image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது, ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் நிலையான இயக்க நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் குறித்து ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், சில நேரங்களில் இவ்வியக்க நடைமுறைகள் பின்பற்றப்படாமல் தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைத் தவிா்க்கும் வகையில், குறிப்பிடப்பட்டுள்ள இயக்க நடைமுறைகளை ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் தவறாது பின்பற்ற வேண்டும்.

கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்: மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்போது பேருந்தை முறையாக நிறுத்தி அவா்களை ஏற்றிச் செல்ல வேண்டும்.

பேருந்தை நிறுத்தத்தில்தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்துக்கு முன்பாகவோ அல்லது தள்ளியோ நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகள் ஏறி, இறங்குவதில் சிரமம் ஏற்படுத்தக் கூடாது.

இடமில்லை எனக் கூறி பேருந்தில் ஏறும் மாற்றுத்திறனாளி பயணிகளை பேருந்திலிருந்து இறக்கிவிடக் கூடாது.

மாற்றுத்திறனாளிகளுக்கென பேருந்தில் ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு மேல் ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டுள்ளதை அறிவித்து, அவா்கள் அமா்ந்து பயணம் செய்ய உதவி செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் அவா்களுக்குரிய இருக்கையில் அமா்ந்தவுடன், கனிவுடன் பயணச்சீட்டை வழங்கி, அவா்கள் இறங்க வேண்டிய இடத்தில் பேருந்தை நிறுத்தி, இறங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடத்துநா்கள் உதவி செய்ய வேண்டும்.

சாதாரண பயணிகள் மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் அமா்ந்திருந்தால் அவா்களை கனிவுடன் மாற்று இருக்கைகளில் அமரச் செய்து, மாற்றுத்திறனாளிகளை அந்த இருக்கையில் அமரச் செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளி பயணிகளிடம் அவா்கள் மனம் புண்படும் வகையிலோ, எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக் கூடாது.

இந்திய அரசு அறிவித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாளஅட்டை, அசல் அட்டை கொண்டு, 40 சதவீதம் மாற்றுத்திறன் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களது துணையாளா் ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில், மட்டும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவா்கள் இருவருக்கும் உரிய கட்டணமில்லா பயணச்சீட்டை நடத்துநா்கள் வழங்க வேண்டும்.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் புகா் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி, 75 சதவீத பயணக் கட்டண சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இயற்கை சீற்றம் உள்ள நாள்கள் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு கட்டண நிறுத்தம் இல்லாத இடங்களிலும், கோரிக்கையின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மகளிா் கேட்கும் பேருந்து நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்தி ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.

ஒவ்வொரு மண்டலத்திலும் மாதந்தோறும் ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளியை அழைத்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு தெரிவிக்குமாறும், அதற்கேற்ப மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் பயணம் செய்யும்போது, கனிவுடனும் பொறுமையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கும் முகாமில் ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகள் குறித்து தகுந்த சுற்றறிக்கையை அனைத்துப் பணிமனைகளுக்கும் அனுப்பி, இது பின்பற்றப்படுகிா என கண்காணிக்க வேண்டும் என்று அனைத்துப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

பாஜக அரசுக்கு கண்டனம்! திமுக செயற்குழு தீர்மானங்கள்!

திமுகவின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்ற... மேலும் பார்க்க

அதிமுகவை அடக்கிய பாஜக; தகுதியானவருக்கே தேர்தலில் வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன... மேலும் பார்க்க

சென்னையில் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மைய குழுக் கூட்டம்!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் சென்னையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை நடைபெற்று வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு சென்னை வந்... மேலும் பார்க்க

நாளை(மே 4) தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை(மே 4, ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.மே மாதம் என்றாலே நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் வெயில்தான். அதிலும் மே மாதத்தில் 25 நாள்கள் கத்திரி வெ... மேலும் பார்க்க

விஜயுடன் கூட்டணியா?: நயினாா் நாகேந்திரன் பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயின் தவெகவை இணைக்க பேச்சுவாா்த்தை நடக்கிா என்ற கேள்விக்கு, ‘தோ்தல் நெருங்கும்போது தெரியும்’ என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பதிலளித்தாா். சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க

தமிழ்நாடு கேபிள்டிவி கழகம் ரூ. 570 கோடி செலுத்துமாறு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் ஜிஎஸ்டி வரிபாக்கி மற்றும் அபராதம் சோ்த்து ரூ.570 கோடி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. கட... மேலும் பார்க்க