செய்திகள் :

விஜய் தேவரகொண்டா மீது காவல் நிலையத்தில் புகார்!

post image

திரைப்பட விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது சர்ச்சையான நிலையில் அவர் மீது தற்போது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா. நடிகர் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படவிழா தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த விஜய் தேவரகொண்டா பேசியது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அவ்விழாவில் பேசிய அவர், முகலாய மன்னர் ஔரங்கசீப் மற்றும் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் ஆகியோரைக் கண்ணத்தில் அறைவேன் எனக் கூறியதுடன், பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும் தனது கருத்தைப் பதிவு செய்தார்.

அப்போது, அவர் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்குடியின மக்களை பெஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டதாகவும், அவர்கள் அறிவின்றி சண்டையிடுவதாகவும் அவர் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கருத்துக்கு பல்வேறு பழங்குடியின அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து, அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், பழங்குடியின மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி ஹைதரபாத்தின் எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் லால் சவுஹான் எனும் வழக்கறிஞர் புகாரளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: “இந்த விவகாரம் பேச்சு சுதந்திரம் பற்றியது அல்ல, விளிம்புநிலை மக்களின் மரியாதை மற்றும் அரசியலமைப்பு வழங்கிய உரிமைகள் குறித்தது” எனக் கூறியுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இருப்பினும், நடிகர் விஜய் தேவரகொண்டா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:சூர்யாவின் படங்களிலேயே அதிக வசூல்: சாதனை படைத்த ரெட்ரோ!

தமிழில் வெளியாகும் துடரும்!

நடிகர் மோகன்லாலின் துடரும் திரைப்படம் தமிழிலும் வெளியாகவுள்ளது. இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரைக்கு வந்... மேலும் பார்க்க

ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது புரமோ!

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தின் புதிய புரமோ வெளியாகியுள்ளது.ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நாயகனாக... மேலும் பார்க்க

பைசன் வெளியீடு அறிவிப்பு!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கபடி விளையாட்டை மையமாக வைத்து பைசன் என்கிற பட... மேலும் பார்க்க

விஜய் சேதுபதி - நித்யா மெனன் படத்தின் பெயர் டீசர்!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன், யோகி பாபு நடிப்பில் புதிய படம்... மேலும் பார்க்க

தெலுங்கு இயக்குநர்களுடன் கைகோர்த்த சூர்யா, கார்த்தி!

நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் இயக்கத்தில் நடிக்க உள்ளனர்.நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக படத்திற்கு வரவேற்பு கி... மேலும் பார்க்க