செய்திகள் :

Kerala: கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தீ விபத்து; 5 பேர் மரணம்.. நிர்வாகம் சொல்வது என்ன?

post image

கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் உள்ள யு.பி.எஸ் அறையில் இருந்து முதலில் புகைவந்தது, அதைத்தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல வார்டுகளில் இருந்து நோயளிகள் தப்பி ஓடினர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் அங்குச் சென்று தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் வடகரா பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன், வெஸ்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த கோபாலான், மேப்பாடியைச் சேர்ந்த நஸீரா, மேப்பயூர் பகுதியைச் சேர்ந்த கங்காதரன், அடையாளம் காணமுடியாத மற்றொரு நோயாளி உள்பட 5 பேர் மரணமடைந்தனர்.

கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து

சுமார் 200 நோயாளிகள் அந்த கட்டடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதில் சுமார் 30 நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோழிக்கோடு மருத்துவமனையில் 3 பேர் புகைமூட்டம் காரணமாக ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ சித்திக் குற்றம்சாட்டினார்.

அதேசமயம் மருத்துவக்கல்லூரி முதல்வர் கூறுகையில், "இறந்தவர்களில் ஒருவர் ஏற்கெனவே விஷம் குடித்து சிகிச்சையில் இருந்தவர். ஒருவர் கேன்சர் பாதித்து சீரியஸ் நிலையில் வந்திருந்தார். மற்றொருவருக்கு கல்லீரல் பிரச்னை இருந்தது. மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் இறக்கவில்லை" என்றார்.

அமைச்சர் வீணா ஜார்ஜ்

இதுகுறித்து கேரள சுகாதாரத்துற அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய பிளாக்கில் யு.பி.எஸ் அறையில் புகை ஏற்பட்ட சம்பவத்தைத் தொடரந்து எமெர்ஜென்சி பகுதியில் உள்ள அனைத்து நோயாளிகளும் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர்.

மேல் மாடி கட்டிடங்களில் இருந்த நோயாளிகளும் அங்கிருந்து மாற்றப்பட்டனர். கட்டடங்களில் வேறு யாரும் இல்லை என்பது பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

எமர்ஜென்சி சேவை தேவைப்படும் நோயாளிகளுக்கு பீச் மருத்துவமனையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யு.பி.எஸ் அறையில் புகையை ஏற்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்" என்றார்.

Goa: அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா; கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

கோவாவில் உள்ள சிர்காவ் என்ற இடத்தில் ஸ்ரீ லைராய் தேவி கோயில் வருடாந்திர திருவிழா நேற்று இரவு நடந்தது. இத்திருவிழாவிற்காக கோவா முழுவதும் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். விழாவில் முக்கிய நிகழ்வாக தீ மி... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் சிக்கிய கரூர் குடும்பம்; குழந்தைகள் உட்பட மூவர் பலி; நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த சோற்றுக்கற்றாழை வியாபாரி பிரபு (வயது: 40). இவரது மனைவி மதுமிதா (வயது: 35).இந்த தம்பதிக்கு தியா (வயது: 10), ரிதன் (வயது: 3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். அ... மேலும் பார்க்க

மும்பை: ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து; 198 கடைகள் சேதம்; உயிர்தப்பிய மக்கள்!

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் குரோமா ஷோரூம் உள்ளிட்ட கடைகள் இருக்கும் பாந்த்ரா பஜார் எனும் மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்சில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேர... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 14 பேர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

கொல்கத்தாவின் மத்திய பகுதியில் உள்ள ருதுராஜ் ஹோட்டலில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இத் தீ மளமளவென அனைத்து பகுதிக்கும் பரவியது. தீயில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். மக்கள் நெருக்கம் மிகுந... மேலும் பார்க்க

கேரளா: 5 வயது சிறுமியைக் கடித்த தெரு நாய்; தடுப்பூசி போடப்பட்டும் மரணமடைந்த சோகம்; என்ன நடந்தது?

கேரள மாநிலம் மலப்புரம் பெருவள்ளூரைச் சேர்ந்தவர் சல்மான் பாரிஸ். இவரது மகள் ஸியா பாரிஸ். 5 வயது ஆன ஸியா பாரிஸ் கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க நடந்து சென்றுள்ளார்.அப... மேலும் பார்க்க

நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மகன்களை, தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய தந்தை.. திருப்பூரில் சோகம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் உள்ள பிஏபி வாய்க்காலில் குளிப்பதற்காக, கோவையில் இருந்து சேகர் தனது குடும்பத்துடன் வந்துள்ளார்.அப்போது, வாய்க்காலில் தனது இரண்டு மகன்களான சசிதரன் ... மேலும் பார்க்க