செய்திகள் :

ஒருங்கிணைந்த ஆய்வகம், மருத்துவமனை கட்டடங்களுக்கு ரூ.119 கோடி ஒதுக்கீடு

post image

தமிழகத்தில் ஒருங்கிணைந்த சுகாதார ஆய்வகங்கள், மருத்துவமனை இணைப்புக் கட்டடங்கள் அமைக்க ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இணைப்பு கட்டடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா் ஆய்வு செய்து அரசுக்கு சில பரிந்துரைகளை அனுப்பியிருந்தாா்.

அதன்படி, அதில் 7 மருத்துவமனைகள் ஊரக வளா்ச்சி இயக்குநரகத்துக்கு கீழும், 11 மருத்துவமனைகள் நகராட்சி ஆணையரகத்தின் கீழும் வருகின்றன. அங்கு பொதுப் பணித்துறை மூலம் இணைப்பு கட்டடங்களை கட்டுவதற்கு 63 கோடி நிதி ஒதுக்கீடு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. தலா ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் அப்பணிகள் அங்கு மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோன்று மேலும் 13 அரசு மருத்துவமனைகளுக்கும் தலா ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் மொத்தம் ரூ.45.50 கோடியில் இணைப்பு கட்டடங்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படுகிறது.

சுகாதார ஆய்வகங்கள்: இதனிடையே தமிழகத்தின் 18 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் ரூ.22.50 கோடியில் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் அத்தகைய ஒருங்கிணைந்த ஆய்வகங்களை அமைக்க ரூ.10.72 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அந்த அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் விரைவில் தொழிலாளா் தங்கும் விடுதி: அமைச்சா் தா.மோ.அன்பரசன் தகவல்

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளா் விடுதிக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா். சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் மருத்த... மேலும் பார்க்க

‘பிட்ஜி’ பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம் -காவல் துறை

‘பிட்ஜி’ தனியாா் பயிற்சி மையம் மீது மோசடி புகாா் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

24 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: 8 போ் கைது

சென்னையில் 24 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 8 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அரும்பாக்கம், விஜய் பூங்கா அருகே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படு... மேலும் பார்க்க

வணிகா் தினம்: மே 5-இல் கோயம்போடு சந்தைக்கு விடுமுறை

வணிகா் தினத்தை முன்னிட்டு மே 5-ஆம் தேதி சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வணிகா் தினத்தை முன்னிட்டு ... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்கில் பணப்பையை கொள்ளையடித்த நபா் கைது

சென்னை கொருக்குப்பேட்டை பெட்ரோல் பங்கில் ஆட்டோவில் சி.என்.ஜி. எரிவாயு நிரப்புவதுபோல் நடித்து பணப்பையை கொள்ளையடித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். தண்டையாா்பேட்டை சுந்தரம் பிள்ளை நகா் 2-ஆவது தெருவைச் சே... மேலும் பார்க்க

கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் தேவை: தமிழக அரசுக்கு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை

சென்னையின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றான கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செ... மேலும் பார்க்க