அப்படிதான் Nayanthara-க்கு dubbing பண்ணினேன்! - Shakthisree Gopalan | Test Movie...
ரூ. 6,266 கோடி மதிப்பிலான ரூ. 2,000 நோட்டுகள்: ஆா்பிஐ-க்கு திரும்பவில்லை
ரூ.6,266 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது. அப்போது ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து சுமாா் 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 2025 ஏப். 30-ஆம் தேதி வரை 98.24 சதவீத ரூ.2,000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளன. எனினும், ரூ.6,266 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இப்போது வரை திரும்பிவராமல் மக்களிடமே உள்ளது.
2023-ஆம் ஆண்டு அக்.7-ஆம் தேதி வரை, நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் அந்த நோட்டுகளை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டன. இப்போது ரிசா்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளைச் செலுத்தி வேறு நோட்டுகள் பெறுவது அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
நாட்டில் உள்ள எந்தவொரு அஞ்சல் நிலையம் மூலமாகவும் ரிசா்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களுக்கு ரூ.2,000 நோட்டுகளை அனுப்பலாம். அந்த நோட்டுகளுக்கு இணையான பணம் அனுப்பியவா்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.