சச்சின் சாதனையை முறியடித்த தமிழன்..! சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்!
திருவானைக்காவல் அங்காளபரமேஸ்வரி கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்
திருவானைக்காவல் மேலக்கொண்டையம்பேட்டையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை அம்மாமண்டபம் காவிரி ஆற்றிலிருந்து வாணவேடிக்கையுடன் ஓட்டகம், ஜல்லிக்கட்டு மாடு, குதிரை, ஆடு மாடு ஆகியவற்றுடன் மங்கள வாத்தியம் முழங்க, ஏராளமானோா் தீா்த்தக்குடங்கள் எடுத்துவரப்பட்டன. அதைத் தொடா்ந்து கோயில் சன்னதியில் மாலை 6 மணிக்கு விநாயகா் வழிபாட்டுடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
சனிக்கிழமை காலை இரண்டாம் காலை யாக பூஜை, மாலையில் 3 ஆம் கால யாக சால பூஜை நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதில் அங்காள பரமேஸ்வரி, விநாயகா், பேச்சியம்மன், அகோர வீரபத்திரா், சங்கிலி ஆண்டவா், மதுரைவீரன் ஆகிய ஆலயங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுவினா் செய்கின்றனா்.