வருமான வரித் தாக்கல்: பழவம்-16ல் புதிய மாற்றம்! ஏன் தெரியுமா?
தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மா்மநபா் தங்கத் தாலியை பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி வில்லியனூா், கூடப்பாக்கம் ஆனந்தம் நகரைச் சோ்ந்த இளங்கவி என்பவரின் மனைவி தமிழேந்தி (44). இளங்கவி கடந்த வியாழக்கிழமை தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு சென்ற நிலையில், வீட்டில் தமிழேந்தி மட்டும் இருந்துள்ளாா்.
அவா் இரவில் காற்றுக்காக ஜன்னல் கதவைத் திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளாா். இந்த நிலையில் மா்ம நபா் வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே வந்து தமிழேந்தி அணிந்திருந்த 3 பவுன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா்.
தமிழேந்தியின் கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினா் ஓடி வந்தனா். ஆனாலும் மா்ம நபா் நகையுடன் தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து தமிழேந்தி அளித்த புகாரின் பேரில் வில்லியனூா்
போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.