வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
கர்நாடகம், தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம்
புதுதில்லி: கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜியம் (நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் குழு) அவ்வப்போது நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்வது வழக்கம்.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடகம், தெலங்கானா மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பணியாற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

எல்லையில் தொடா்ந்து 8-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: இந்தியா பதிலடி
இதனைத் தொடர்ந்து, கர்நாடக உயர்நீதிமன்ற 4 நீதிபதிகள் உள்பட 7 நீதிபதிகளையும் தமிழ்நாடு, கேரளம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மாற்றம் செய்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடர் மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.