செய்திகள் :

உ.பி. மாநில மதமாற்ற திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

post image

சட்டவிரோத மதமாற்றத்துக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் கொண்டுவந்த 2024-ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் செல்லத்தக்க தன்மையை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

லக்னெளவைச் சோ்ந்த ரூப் ரேகா வா்மா மற்றும் பிறா் தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘உத்தர பிரதேச அரசு கொண்டுவந்த இந்த திருத்தச் சட்டத்தின் 2, 3 ஆகிய பிரிவுகள் தெளிவா இல்லை. குற்றத்தைத் தீா்மானிக்கும் காரணிகள் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அதன் காரணமாக, குறிப்பிட்ட மத நம்பிக்கையை பின்பற்ற விரும்பும் அல்லது பிரசாரம் செய்ய முயலும் தனிநபா்களுக்கு எதிராக தன்னிச்சையான, பாகுபாடான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்கின்றனா். இது, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 (சட்டத்தின் முன்அனைவரும் சமம்), பிரிவு 19 (பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்), பிரிவு 21 (வாழும் மற்றும் தனிமனித சுதந்திர உரிமை), பிரிவு 25 (விரும்பும் மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம்) ஆகிய பிரிவுகளை மீறுவதாக உள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் சோ்த்து இந்த மனுவும் வரும் 13-ஆம் தேதி விசாரிக்கப்படும்’ என்று குறிப்பிட்டனா். எனினும், மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்க இயலாது என்றம் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை!

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நட... மேலும் பார்க்க

98% அமலாக்க வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீதுதான்! திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான் அதிகளவிலான அமலாக்க வழக்குகள் சுமத்தப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் தெரிவித்தார்.மே முதல் தேதியில் அமலாக்கத் துறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அமலாக்கத் ... மேலும் பார்க்க

மக்கள்தொகை தரவுகள் மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும்: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்!

சாதிவாரிக் கணக்கெடுப்பில் சமூகப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு கொள்கைகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதம... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பொருள்களுக்குத் தடை! மத்திய அரசு உத்தரவு!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த நி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிக்கும் தடை: மத்திய அரசு

பயங்கரவாதத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்வொரு பொருள்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.தேசிய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்... மேலும் பார்க்க

அமித் ஷா மிகப்பெரிய தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

மணிப்பூரைப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஒதுக்கி வருவதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கடந்த 2022 பிப்ரவரியில் மணி... மேலும் பார்க்க