ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!
அதிகபட்ச முதல்நாள் வசூல்..! ஹிட் 3 படத்தினால் நானி சாதனை!
நானி நடிப்பில் வெளியான ஹிட் 3 படத்தின் முதல்நாள் வசூலின் மூலமாக புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானியின் நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிப் படமானது.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
சைலேஜ் கொலனு இயக்கத்தில் நானி நடித்த ஹிட் - 3 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
வால் போஸ்டர் சினிமா, அனானிமஸ் புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் நேற்று (மே.1) திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். ஹிட் படத்தின் முதலிரண்டு பாகங்கள் அபார வெற்றி பெற்றன.
ஹிட் 3 படத்துக்கு ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் வன்முறை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் இருக்கின்றன.
இந்நிலையில், முதல்நாளில் ஹிட் 3 படம் ரூ. 43 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இதுதான் நானி படங்களில் அதிகபட்ச முதல்நாள் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
