செய்திகள் :

Vizhinjam: `எங்கள் பார்ட்னர் அதானி' கேரள அமைச்சர் பேச்சு; `நல்ல மாற்றம்' பிரதமர் மோடி பாராட்டு

post image

விழிஞ்ஞம் வர்த்தக துறைமுக திறப்புவிழா

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள விழிஞ்ஞம் அதானி வர்த்தக துறைமுக திறப்புவிழா இன்று நடைபெற்றது. விழிஞ்ஞம் துறைமுக திறப்பு விழாவில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள், திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி-யான காங்கிரஸ் முக்கிய தலைவர் சசிதரூர், கோவளம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. கேரள துறைமுகத்துறை அமைச்சர் வாசவன், கேரளா முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய மூவர் மட்டுமே பேசினர்.

கேரள துறைமுகத்துறை அமைச்சர் வாசவன் வரவேற்புரையின்போது, 'எங்கள் பார்ட்னர் அதானியை வரவேற்கிறேன்' என கூறினார்.

அமைச்சர் வாசவனின் பேச்சை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திரமோடி, 'தனியார் பங்களிப்பை வரவேற்று ஒரு கம்யூனிஸ்ட் அமைச்சர் பார்ட்னர் எனக்கூறியிருப்பது நல்லமாற்றம்' என கூறினார்.

விழிஞ்ஞம் அதானி துறைமுக திறப்புவிழாவில் பிரதமர் மோடி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன்

`பலருடைய தூக்கத்தை கெடுத்துள்ளது' - பிரதமர் மோடி

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "முதலமைச்சர் பினராயி விஜயன் இந்தியா கூட்டணியின் வலிமையான தூண் அல்லவா. சசிதரூர் மேடையில் இருக்கிறார். இந்தியா கூட்டணியில் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி பலருடைய தூக்கத்தை கெடுத்துள்ளது" என்றார்.

இந்தியா கூட்டணி குறித்து பேசி எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை மறைமுகமாக பிரதமர் மோடி கிண்டலடித்துள்ளார்.

மொழிபெயர்ப்பு..

அதே சமயம் 'இண்டி அலைன்ஸ்' என பிரதமர் மோடி பேசியதை மலையாளத்தில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் பள்ளிப்புறம் ஜெயக்குமார் `அலைன்ஸ்' என்பதை `ஏர்லைன்ஸ்' என தவறாக புரிந்துகொண்டு, 'நம் நாட்டின் ஏர்லைன்ஸ் சம்மந்தப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்' என தெரிவித்தார். இதை விழா மேடையில் இருந்தவர்கள் அருகில் உள்ளவர்களிடம் சொல்லி சிரித்துக்கொண்டனர்.

விழிஞ்ஞம் துறைமுக திறப்புவிழாவில் பிரதமர் மோடி

இதுகுறித்து மொழிபெயர்ப்பாளரும் இந்தி ஆசிரியருமான பள்ளிப்புறம் ஜெயக்குமார் கூறுகையில், "நான் பல ஆண்டுகளாக பிரதமர் மோடியின் பேச்சை மொழிபெயர்ப்பு செய்துவருகிறேன். இந்த மேடையில் மைக் பிரச்னை இருந்தது. அதனால் பிரதமர் பேசியது எனக்கு சரியாக கேட்கவில்லை. நான் தவறாக கூறியது பிரதமருக்கு புரிந்தது. உடனே நான் அதை திருத்தி கூற முயன்றபோது பிரதமர் பேசத்தொடங்கிவிட்டார். அதனால் நான் திருத்தாமல் அமைதியாகிவிட்டேன்" என்றார்.

RTI: `உயிர், உடமைக்குப் பாதுகாப்பில்லாத காரணத்தால் தகவல் வழங்க இயலாது!' - அறநிலையத்துறை சொன்ன பதில்

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி வாய்ப்பை இழந்துநிற்கும்போதும், இன்றும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு நல்ல விஷயம் என்றால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைகுறிப்பிடுவார்கள் பலரும். கட்சி வித்திய... மேலும் பார்க்க

`Award-களை அள்ளிய மஞ்சுவிரட்டு படம்' - Suresh Kumar Interview! | Photographers Diary

'மஞ்சுவிரட்டில் எடுத்த புகைப்படம், மழை வெள்ள காலத்தில் பீச்சில் கிரிக்கெட் விளையாடியவர்களை எடுத்த படம்' என சர்வதேசளவில் பல்வேறு விருதுகளை அள்ளி வந்துள்ளார் The Times of india Assistant Photo Editor C.... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு முன் நிற்கும் மிகப்பெரிய சவால்கள் என்னென்ன?

இதுவரை, 'சாதிய பிளவு ஏற்பட்டுவிடும்' என்று கூறிவந்த பாஜக அரசே, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, சாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளது. இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப... மேலும் பார்க்க

``என் பிரதமர் மோடிஜி மீது நம்பிக்கை உள்ளது; அவர் ஒரு போராளி..'' - நடிகர் ரஜினிகாந்த்

மும்பையில் இன்று முதல் நான்கு நாள்களுக்கு திரைத்துறையை சார்ந்த WAVES 2025 (World Audio Visual and Entertainment Summit) நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் திரைத்துறை பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலர் கலந்... மேலும் பார்க்க

Vijay: அரசியல்வாதியாக முதல் செய்தியாளர் சந்திப்பு; மதுரை மக்கள் பற்றி விஜய் என்ன பேசினார்?

மதுரை புறப்பட்ட தவெக கட்சியின் தலைவர் விஜய் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அரசியல்வாதியாக முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் விஜய். இந்த சந்திப்பில் தன்னுடைய பயண திட்ட... மேலும் பார்க்க