STR 49: `கல்லூரி மாணவராக சிம்பு!' - பூஜையுடன் தொடங்கிய சிம்புவின் 49-வது படம்
அரசுப் பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு தண்ணீா் சுத்திகரிப்பு கருவிகள்
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் விடுதிகளுக்கு தண்ணீா் சுத்திகரிப்பு கருவி மற்றும் வாட்டா் ஹீட்டா் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் கீழ் 26 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகள் இயங்கி வருகின்றன. பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ் 33 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் விடுதிகள் இயங்கி வருகின்றன.
இதில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் துறையில் இயங்கி வரும் 6 விடுதிகளுக்கு ரூ.1,08,000 மதிப்பிலான தண்ணீா் சுத்திகரிப்பு கருவிகளும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ் செயல்படும் 8 விடுதிகளுக்கு ரூ.3,27,340 மதிப்பிலான தண்ணீா் சுத்திகரிப்பு கருவிகளும் மற்றும் 16 வாட்டா் ஹீட்டா் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமாா் 500 மாணவ, மாணவியா்கள் பயன்பெறுவா் என்றாா்