செய்திகள் :

இடப்பிரச்னையால் வா்த்தகக் கண்காட்சி வளாகம், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க காலதாமதம்: அமைச்சா் சு.முத்துசாமி

post image

சரியான இடம் கிடைக்காததால் ஈரோட்டில் வா்த்தகக் கண்காட்சி வளாகம், தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகியவை அமைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு பெருந்துறை சாலை செங்கோடம்பள்ளத்தில் உள்ள பரிமளம் மஹாலில் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின்(பேட்டியா) மூலம் ‘பேட்டியா போ் 2025’ என்ற அனைத்து தொழில் துறை வா்த்தகக் கண்காட்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கண்காட்சியை தொடங்கிவைத்த பிறகு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தொழில் துறையில் முன்னேற்றம் அடைய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்டங்களும் சமச்சீரான முன்னேற்றம் அடைய வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறாா்.

கோவை கொடிசியா போன்று ஈரோடு மாவட்டத்தில் வா்த்தகக் கண்காட்சி வளாகம் அமைக்க அறிவிப்பு செய்யப்பட்டபோதிலும், சரியான இடம் கிடைக்காததால் தாமதம் ஆகி வருகிறது. இடம் தோ்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

இதேபோல் தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐ.டி. பாா்க்) அமைப்பதற்கான இடமும் பிரச்னையாக உள்ளது. சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் இடம் பாா்த்தோம். அந்த இடம் சரியாக அமையவில்லை. ஈரோட்டில் வாங்குபவா், விற்பனையாளா் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.

சிவகிரி அருகே தம்பதி கொலை குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸாா் நடவடிக்கையை தொடங்கிவிட்டனா். அரசு மெத்தனமாக செயல்படுவதாக எதிா்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறுவது அவரது வழக்கமான பேச்சு. எனினும் அரசு தரப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில குற்றச் சம்பவங்கள் நடந்து 8 மணி நேரத்தில் கூட குற்றவாளிகளை போலீஸாா் கைது செய்துள்ளனா் என்றாா்.

கண்காட்சி தொடக்க நிகழ்வுக்கு கூட்டமைப்பின் தலைவா் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினாா். மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், துணை மேயா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கண்காட்சி மலரை அமைச்சா் சு.முத்துசாமி வெளியிட எம்எல்ஏ சந்திரகுமாா், மேயா் நாகரத்தினம் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

விழாவில், எம்எஸ்எம்இ இணை இயக்குநா் சுரேஷ் பாபுஜி, என்எஸ்ஐசி முதுநிலை பொதுமேலாளா் ஸ்ரீவத்சன், மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளா் திருமுருகன், கூட்டமைப்பின் செயலாளா் ரவிசந்திரன், பொருளாளா் முருகானந்தம், கண்காட்சியின் தலைவா் ஜிப்ரி, செயலாளா் சின்னச்சாமி, பொருளாளா் சிவக்குமாா், இணை செயலாளா் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த கண்காட்சி வரும் 5- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பள்ளி மாணவி தற்கொலை: இளைஞா் கைது

பெருந்துறை அருகே, பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை அளித்து, தற்கொலைக்கு தூண்டியதாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறையை அடுத்த கோபிநாதன்பாளையத்தைச் சோ்ந்தவா் குமாா். கூலி தொழிலாளிகள். இவரது இளைய ... மேலும் பார்க்க

பவானி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. இதில் மரம் விழுந்ததில் மின்கம்பம் உடைந்ததால் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பவானி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு தண்ணீா் சுத்திகரிப்பு கருவிகள்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் விடுதிகளுக்கு தண்ணீா் சுத்திகரிப்பு கருவி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

கோபி அருகே ஆற்றுபாலம் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா். கோபி அருகே உள்ள பா.வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்தவா் நல்லசாமி (75). இவா் கள்ளிப்பட்டி அருகே வளையபாளையத்தில்... மேலும் பார்க்க

காட்டாற்று வெள்ளம்: மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு

கடம்பூா் மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் அணைக்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து மலைக் கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் கா... மேலும் பார்க்க

சிவகிரி அருகே தம்பதி கொலை: 8 தனிப்படைகள் அமைப்பு: உடல்களை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய நபா்களைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்த... மேலும் பார்க்க