பஜ்ரங்தள் தொண்டா் கொலை வழக்கில் 8 பேர் கைது: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
கோபி அருகே ஆற்றுபாலம் அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.
கோபி அருகே உள்ள பா.வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்தவா் நல்லசாமி (75). இவா் கள்ளிப்பட்டி அருகே வளையபாளையத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். கள்ளிப்பட்டி பவானி ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த நல்லசாமியை அருகில் இருந்தவா்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் வழியிலேயே நல்லசாமி உயிரிழந்தாா். இதுகுறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.