மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 3,619 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர் பிடிப்புப் பகுதிகளிலும் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,363 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 2,323 கன அடியாகவும் சனிக்கிழமை காலை வினாடிக்கு 3,619 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
திமுகவை வீழ்த்த மெகா கூட்டணி அதிமுக செயற்குழு தீா்மானம்
நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெள்ளிக்கிழமை காலை 107.81 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 107.95 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
அணையின் நீர் இருப்பு 75.52 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.