செய்திகள் :

பள்ளிவாசல் முன்பு பல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர்! - வரவேற்ற இஸ்லாமியர்கள்

post image

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

சாமி வேடமிட்ட குழந்தைகளுக்கு குளிர்பானம் அளிக்கும் இஸ்லாமியர்கள்

சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு நாள்தோறும் அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

விழாவின் 4 ஆம் நாளில் மதுரை வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் சுவாமியும், அம்மனும் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி தெற்குவாசல் வழியாக சின்னகடைத் தெரு, சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பள்ளிவாசல் முன்பு

சுவாமியும் அம்மனும் தெற்குவாசல் பகுதியில் வந்தபோது அப்பகுதியிலுள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் சார்பில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கும், சிவாச்சாரியார்களுக்கும், குழந்தைகளுக்கு குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

மத நல்லிணக்கம்

அப்போது பள்ளிவாசல் முன்பாக தங்கப் பல்லக்கில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளியபோது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பள்ளிவாசல் முன்பாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க பல்லக்கு நிறுத்தப்பட்டு அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலையை பள்ளிவாசல் நிர்வாகிக்கு சிவாச்சாரியார் அணிவித்து மரியாதை செய்தார்.

தெற்குவாசல் பள்ளிவாசல் முன்பு

சுவாமிகள் வீதி உலாவின் போது மீனாட்சியம்மன், சிவபெருமான், முருகர், கிருஷ்ணர், ஆண்டாள், கருப்பசாமி, வேடமிட்டபடி குழந்தைகள் வந்தனர்.

தெற்குவாசல் பகுதி பள்ளிவாசல் முன்பாக கூடியிருந்த இஸ்லாமியர்கள் தங்கபல்லக்கில் எழுந்தருளிய அம்மனையும், சுவாமியையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சுவாமி பல்லக்கு ஊர்வலத்தில் வருகை தந்த பக்தர்களையும், சாமி வேடமிட்டு வந்த குழந்தைகளையும் வரவேற்று மரியாதை செய்தனர்.

மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் மதுரை சித்திரைத்திருவிழாவின் நடைபெறும் இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்றுக தீபம்! போற்றுக தீபம்! - உறையூர் குங்குமவல்லி கோயில் விளக்கு பூஜை; அனுமதி இலவசம்; முழு விவரம்

ஏற்றுக தீபம்! போற்றுக தீபம்! 2025 ஏப்ரல் 22-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் திருச்சி உறையூர் குங்குமவல்லி கோயிலில் விளக்குப் பூஜை. கலந்து கொள்ளுங்கள்!முன்பதிவுக்கு: 044-66802980/07முன்பதிவு ... மேலும் பார்க்க

"முருகன் அனைவருக்கும் நல்ல சக்தியை வழங்க வேண்டும்" - குமரி கோயிலில் வேல் பூஜை செய்த சுரேஷ் கோபி!

கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள வேளிமலை குமாரகோயில் முருகன் திருத்தலம் தமிழகம் மற்றும் கேரள பக்தர்களிடையே பிரசித்தி பெற்றது. நவராத்திரி விழாவுக்காக இங்குள்ள முருகப்பெருமான் திருவனந்தபுரத்துக்கு எழுந்தருள... மேலும் பார்க்க

பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா; கடலென கூடிய பக்தர்கள் - Photo Album

பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: கடலில் வீசப்படும் துணிகள்; நீராடும் பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறு!

பாவத்தை போக்கும் இடம் பாபநாசம் என்கிறாரகள். அதன் காரணமாக பரிகாரம் செய்ய வருபவர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதற்காக வருபவர்கள் அவரவர் தன்மைக்கேற்ப யாகமோ, தர்ப்பணமோ செய்து விட்டு நதியில் தலைமுழுக... மேலும் பார்க்க

ராமநவமி தோன்றிய புராண வரலாறு: ஸ்ரீராமநவமி விரதம் - நினைவில் கொள்ள வேண்டியவை

'கலியுகத்தில் கடுமையான விரதங்களோ பூஜைகளோ செய்துதான் புண்ணியபலன்களை அடையவேண்டும் என்பது அவசியமில்லை. அன்புடன் பகவானின் திருநாமத்தினைச் சிந்தித்தாலே போதும்' என்பது எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவாக்கு.அ... மேலும் பார்க்க