இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 14 பேர் காயம்
காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 29 பாலஸ்தீனியர்கள் பலி
காஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் 29 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
மத்திய காஸாவில் உள்ள புரைஜ் அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேரும் வடக்கு நகரமான பெய்ட் லாஹியாவில் உள்ள அல்-மஸ்ரி குடும்ப வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் மேலும் 6 பேரும் கொல்லப்பட்டனர்.
அதேபோல் காஸா நகரில், ஒரு சமூக சமையலறையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் காஸா பகுதி முழுவதும் மற்ற இடங்களிலும் இதேபோன்று நடந்த தாக்குதல்களில் எட்டு பேர் கொல்லப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜிடிஏ 6 விடியோ கேம் வெளியீடு! நீண்டகால காத்திருப்புக்கு முடிவு!
போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த பிறகு காஸா மீது இஸ்ரேல் மீண்டும் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 2,326 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்துடன், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சுமாா் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடத்திவரும் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 52,418 ஆக உயர்ந்துள்ளது என்று ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.