இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 14 பேர் காயம்
ஜிடிஏ 6 விடியோ கேம் வெளியீடு! நீண்டகால காத்திருப்புக்கு முடிவு!
ஜிடிஏ 6 கேமின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ கேமின் (Grand Theft Auto) 6-வது பதிப்பின் வெளியீட்டுத் தேதியை, அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் 2013 ஆம் ஆண்டிலேயே அறிவித்திருந்தது.
இருப்பினும், ஒவ்வோர் ஆண்டும் ஜிடிஏ 6-க்காக அதன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இதனிடையே, 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்படுவதாய் இருந்த நிலையில், அடுத்தாண்டு மே மாதம் 26 ஆம் தேதியில்தான் ஜிடிஏ 6 வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
Grand Theft Auto VI is now set to release on May 26, 2026. https://t.co/YgaIn1cYc8pic.twitter.com/cyeK7GM6Ob
— Rockstar Games (@RockstarGames) May 2, 2025
இதுகுறித்து, ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் தெரிவித்ததாவது, ``ஜிடிஏ 6-ன் அறிவிக்கப்பட்ட தேதியைவிட தாமதமாக வெளியிடப்படுவதற்கு வருந்துகிறோம். ஜிடிஏ 6-ஐ முடிக்கும்வரையில் ஆதரவு தெரிவித்ததற்கும், பொறுமை காத்ததற்கும் நன்றி.
ராக்ஸ்டாரின் ஒவ்வொரு விளையாட்டிலும் உங்கள் எதிர்பார்ப்பைக் காட்டிலும் அதிகமாகத் தருவது மட்டுமே எங்கள் குறிக்கோள். அதற்கு ஜிடிஏ 6-யும் விதிவிலக்கல்ல.
ஆகையால், விளையாட்டின் தரத்தை மேம்படுத்த எங்களுக்கு கூடுதல் நேரம் தேவை. மேற்பட்ட தகவல்களும் தொடர்ந்து பகிரப்படும்’’ என்று கூறினர்.
இதையும் படிக்க:ஒரு கொரில்லாவை 100 மனிதர்கள் வீழ்த்த முடியுமா? இணையத்தைக் கலக்கும் விமர்சனங்கள்!