ஜெய்ப்பூர்: மனைவியை கொலை செய்து உடலை குப்பைக் கிடங்கில் மறைத்து வைத்த நபர் கைது
ஏற்றத்தில் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம்!
பங்குச்சந்தை இன்று(மே 2) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,300.19 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 11.40 மணியளவில், சென்செக்ஸ் 233.41 புள்ளிகள் அதிகரித்து 80,475.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 10.95 புள்ளிகள் உயர்ந்து 24,345.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
முன்னதாக இன்று காலை சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகமானது.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமாகின்றன. ஐடி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆற்றல் துறைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.
நிஃப்டியில் அதானி போர்ட்ஸ், ஹிண்டால்கோ, மாருதி சுசுகி, இண்டஸ்இண்ட் வங்கி, எம் & எம் ஆகியவை அதிக லாபம் பெற்றுள்ளன.
அதேநேரத்தில் ஈச்சர் மோட்டார்ஸ், நெஸ்லே, பஜாஜ் ஃபின்சர்வ், சிப்லா, எச்.யு.எல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.