செய்திகள் :

``விருப்பம் என்று சுருங்கி விடாதீர்கள்; தேடலை விரிவுப்படுத்துங்கள்..'' - கல்வியாளர் நெடுஞ்செழியன்

post image

+2-க்கு பிறகு என்ன படித்தால் எதிர்காலம்?

கல்வி விகடன் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்திய +2-க்கு பிறகு என்ன படித்தால் எதிர்காலம்? எனும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னைத் தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வியை முடித்த மாணவர்களுக்கு தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டமான, கல்லூரி வாழ்க்கையில் எப்படி அடியெடுத்து வைப்பது குறித்தான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

கல்வியாளர் நெடுஞ்செழியன் உரை

நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய கல்வியாளர் நெடுஞ்செழியன் "இந்த நிகழ்ச்சியின் தலைப்பு, என்ன படித்தால் எதிர்காலம் என்பதுடன் எங்கு படித்தால் எதிர்காலம் என்பது விடுபட்டுள்ளது. என்ன படிப்பு வேண்டுமானாலும் படிக்கலாம், இந்தியாவில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 28.4. இவ்வளவு தான் இந்தியாவில் மாணவர்கள் உயர்கல்விக்கே வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் அதிகம் என்று சொல்லலாம் இருந்தாலும் நாடு முழுவதும் ஏறத்தாழ 30 சதவீதம் தான் உயர்கல்வி படிக்கிறார்கள், மீதம் 70 சதவீதம் பேர் படிக்கவில்லை என்று அர்த்தம் அப்படி என்றால் அது நாட்டுக்கு நல்லதில்லை. என்னக் கிடைத்தாலும் படித்துவிடுங்கள்.

இந்த படிப்புதான் நன்றாக உள்ளது என நினைக்காதீர்கள்..

வள்ளுவர் சொன்னதில் கல்வி அழிக்க முடியாத செல்வம் என்பதை மட்டும் தான் எடுத்துக்கொண்டோம். எதை மறந்துவிட்டோம் என்றால் அவர் கல்வியே செல்வம் என்கிறார். செல்வம் எந்த வடிவில் வந்தாலும் நீங்கள் நிராகரிக்க கூடாது. எனக்கு இந்தப் படிப்புதான் வேண்டும் இந்த படிப்புதான் நன்றாக உள்ளது என நினைக்காதீர்கள். எனக்கெல்லாம் இது ஒன்று தான் படிப்பு இதை படி என்றார்கள்.

இப்போது உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதால் குழம்பி போய்விடுகிறீர்கள். சுந்தர் பிச்சை கூட கணிணி அறிவியல் எல்லாம் படிக்கவில்லை.

நெடுஞ்செழியன்
நெடுஞ்செழியன்

என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் தரமானக் கல்வியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால், கோவிட் பேட்ச் என்று சொல்வார்கள் அதனால் நீங்கள் தேர்வு எழுதும் வேகத்தை இழந்துவிட்டதாக சொல்கிறார்கள். இந்த இரண்டு வருட கோவிட் இடைவெளியினால் நீங்கள் 20 வருடம் பின்னோக்கி வந்துவிட்டதாக சொல்கிறார்கள். 

பிடித்தப் படிப்பைப் படிக்க வேண்டும், எதற்கு அதிக ஸ்கோப் உள்ளது என்று தேடி படிக்க வேண்டும், வேலை கிடைக்க வேண்டும் என்பதையே கல்வியின் நோக்கமாக கொண்டு தவறான பயணத்தில் போய் கொண்டிருக்கிறோம். மாற்றங்களைப் புரிந்து என்ன கல்வி என்றாலும் நான் படிப்பேன் என நினைத்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். 

பொருளாதாரத்துக்கு ஏற்ற கல்லூரியில் படியுங்கள்

என்னைப் பொறுத்த வரையில் உயர்கல்வியில் உங்கள் பொருளாதாரத்துக்கு ஏற்றார் போல கிடைத்த கல்லூரியில் படித்து திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்.

நாம் எல்லோரும் லட்சங்களில் போட்டியிட்டு முன்வருவதைத் தான் பார்க்கிறோம். போட்டியில்லாத இடங்களை பார்ப்பது கிடையாது. இந்த உலகத்தில் பிறந்த எல்லோருக்கும் ஒரு இடம் உருவாகியுள்ளது. ஆனால் அந்த இடத்தைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதானது கிடையாது.

மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

+2 -க்கு பிறகு 80-க்கும் மேலான நுழைவு தேர்வுகள்

நீங்கள் அகத்திலேயும் தேடவேண்டும் புறத்திலேயும் தேடவேண்டும். தேடும் போது உங்களுக்கு பொருந்திபோய்விட்டால் உங்களை யாராலும் தடுக்க முடியாது. அதற்கு உங்கள் தேடலை நீங்கள் ஆழப்படுத்த வேண்டும் விரிவு படுத்த வேண்டும். 

பன்னிரண்டாம் வகுப்புக்கு பிறகு 80-க்கும் மேலான நுழைவு தேர்வுகள் இருக்கிறது. இதற்கெல்லாம் விண்ணப்பம் செய்யுங்கள். இந்த தேர்வு அனுபவங்கள் பின்னாளில் எதிர்கொள்ளும் தேர்வுகளுக்கு பயிற்சியாக இருக்கும். எல்லாவற்றையும் எழுதி தேர்வாகி பின் அதிலிருந்து நீங்கள் தேர்வு செய்யுங்கள் அப்படி எதில் சேர்ந்தாலும் நீங்கள் நன்றாக தான் படிப்பீர்கள்.

பரிந்துரைக்க மாட்டேன்..

குறிப்பிட்டு இதை தான் படியுங்கள் என்று சொல்லவில்லை இருப்பதில் எது சிறந்தது என்பதை தேர்வு செய்யுங்கள் என்றே சொல்லுகிறேன்.

சீக்கிரம் எதிலும் செட்டில் ஆகாதீர்கள், விட்டுக்கொடுக்காதீர்கள். அதே போல உங்களின் போட்டி உங்களுக்குள் தான் இருக்க வேண்டும். வெளியில் இருப்பவரோடு இருக்க கூடாது. இது போட்டிகள் நிறைந்த உலகம் தான் ஆனால் போட்டிகளை பார்த்தால் காணாமல் போய்விடுவோம்‌.

உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதனால் எந்த குறிப்பிட்ட படிப்பையும் நான் பரிந்துரைக்க மாட்டேன். 

நெடுஞ்செழியன்
நெடுஞ்செழியன்

உங்களை அப்டேட் செய்யுங்கள்..

ஏ.ஐ. போன்ற ஏற்கெனவே கண்டுபிடித்தப் படைப்புகள் எல்லாம் புதைந்துள்ளன. உங்களைப் போல இளைஞர்கள் அதை தொடும் போது அது காட்டு தீயாக பரவி விடுகிறது. அது போல நாம் தோண்டி எடுக்க வேண்டிய துறைகள் அதிகம் உள்ளது.

உங்களது தலைமுறையின் சவாலாக நான் பார்ப்பது, தொழில்நுட்பம் நினைத்ததை விட வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல் உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளவில்லை என்றால் உங்கள் வேலை என்பது நிரந்தரமான ஒன்றாக இருக்காது.

சில இணையதளங்கள் உள்ளன, ஒரு லோகோ வடிவமைக்க வேண்டும் என்றால் ஒரு ₹800 கொடுத்தால் உலகில் எங்கோ உள்ளவர்கள் அதனை வடிவமைத்து தருகிறார்கள்.

இது போல் நாம் நிறைய பேரிடம், நிறைய டிசைன்கள் வாங்க முடியும். இதுவே நான் உங்களை வேலைக்கு வைத்தால் உங்கள் ஒருவரிடம் ஒரு டிசைனை வாங்குவதற்குள் உயிர் போய்விடும். இந்த சூழலில் வேலைவாய்ப்புகள் சுருங்கி கொண்டே வருகின்றன. அதனால் நீங்கள் உங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்".

விருப்பம் என்பதற்குள் சுருக்கிக் கொள்ளாதீர்கள்

தொடர்ந்து பேசிய அவர், "விருப்பத்தின் படி படிக்க கூடாது என்று தான் நான் சொல்லுவேன். மனிதனின் மனம் Monkey mind இன்னொரு சிறந்த ஒன்றை பார்த்தால் அதுவாகவே தாவிவிடும். விருப்பம் என்பதற்குள் சுருக்கிக்கொள்ளாதீர்கள் அது நேரத்துக்கு நேரம் மாறிவிடும்.

நெடுஞ்செழியன்
நெடுஞ்செழியன்

நிகழ்காலத்தில் நன்றாக படியுங்கள் அப்போது தான் எதிர்காலம் நன்றாக இருக்கும். எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டும் என்று நினைத்து நிகழ்காலத்தை தொலைக்க வேண்டாம். எங்கு இருந்தாலும் நன்றாக படிக்கலாம் அதை பழக்க படுத்திக்கொள்ளுங்கள்" என்று ஆலோசனை வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்து கூறி முடித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கோவை: UPSC/TNPSC குரூப் - 1, 2 போட்டி தேர்வுகளில் வெல்வது எப்படி? இலவசப் பயிற்சி முகாம்; முழு விவரம்

UPSC/ TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகடாமி இணைந்து கோவையில் ஓர் இலவச பயிற்சி முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அ... மேலும் பார்க்க

NCERT பாடபுத்தகம்: ``காண்டாமிருகங்கள் பற்றி தவறான தகவல்கள்'' - கொதிக்கும் நெட்டிசன்கள்!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT)-ன் வரலாற்று புத்தகங்கள் சர்ச்சைக்கு உள்ளவாது சமீபகாலமாக வழக்கமாகியிருக்கிறது. இந்த நிலையில் நான்காம் வகுப்புக்கான அறிவியல் புத்தகங்களில் இடம்பெற... மேலும் பார்க்க

Community Certificate: 60 ரூபாய் போதும்! - ஆன்லைனில் சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அரசுத்தேர்வை எழுதுபவர்களுக்கும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ள சாதிச் சான்றிதழ் கட்டாயம் தேவைப்படும். குறிப்பாக தற்போது 10ம், 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை எழுதி... மேலும் பார்க்க