ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!
தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது, கருத்தடை செய்வது, கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அண்மைக் காலமாக அதிக நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்களில் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 13 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், நாய்க்கடி பிரச்னைகளால் ரேபிஸ் பாதிப்பும் அதிகரித்து வருவதால் இந்த பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.