செய்திகள் :

அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்?

post image

சென்னையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் என 370-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விளக்கமளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து கட்சியின் செயல்திட்டங்கள், தேர்தல் வியூகம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு கடந்த ஏப். 25 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு கேபிள்டிவி கழகம் ரூ. 570 கோடி செலுத்துமாறு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் ஜிஎஸ்டி வரிபாக்கி மற்றும் அபராதம் சோ்த்து ரூ.570 கோடி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. கட... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த மெகா கூட்டணி அதிமுக செயற்குழு தீா்மானம்

திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க தொடா்ந்து வியூகம் வகுத்து வரும் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து அதிமுக செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ராயப்ப... மேலும் பார்க்க

உயிா்ம வேளாண்மை: 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வாா் விருது -முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

உயிா்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வாா் விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரச... மேலும் பார்க்க

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த 9 அம்ச செயல் திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த 9 அம்ச செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். பொது இடங்களில் குறிப்பாக நகரப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்கள் சாா்பில் முதல்வருக்கு இன்று பாராட்டு விழா

ஆளுநருக்கு எதிரான நீதிமன்ற வழக்கில் சாதகமான தீா்ப்பைப் பெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கல்வி நிறுவனங்கள் சாா்பில் சென்னையில் பாராட்டு விழா சனிக்கிழமை (மே3) நடைபெறுகிறது. ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டரங... மேலும் பார்க்க

முழு விசாரணைக்குப் பிறகே ஜாதி சான்றிதழ்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. போலி ஜாதி சான்றிதழ்கள் கொடுத்து வேலைவாய்ப்பை பெற்ாகக் குற்றச்சாட்... மேலும் பார்க்க