செய்திகள் :

மும்பையின் தொடர்ச்சியான வெற்றிக்குக் காரணம் என்ன? மனம் திறந்த ஹார்திக் பாண்டியா!

post image

ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் (மே.1) மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 16.1 ஓவா்களில் 117 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தப் போட்டியின் வெற்றியின் மூலம் மும்பை இந்தியனஸ் அணி புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

இந்த வெற்றி குறித்து மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது:

சாதாரணமான கிரிக்கெட் விளையாடுகிறோம்

நாங்கள் அனைவரும் சாதாரணமான கிரிக்கெட் விளையாட வேண்டுமென்ற விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம். இது எங்களுக்கு வேலை செய்கிறது, அதிலேயே தொடர்வோம் என நினைக்கிறேன்.

நாங்கள் மிகவும் தன்னடக்கமாகவும் ஒழுக்கமாகவும் போட்டியில் முழு கவனமாகவும் இருக்க விரும்புகிறேன்.

நாங்கள் கூடுதலாக 15 ரன்களை பெற்றிருக்கலாம். நானும் சூர்யாவும் பேசிக்கொண்டது என்னெவென்றால் குறைவான ரிஸ்க் உள்ள ஷாட்டுகளை ஆட வேண்டுமென்பதே.

ஒவ்வொரு ஷாட்டுக்கும் மதிப்பு இருக்க வேண்டுமென நாங்கள் பேசிக்கொண்டோம்.

பேட்ஸ்மேன்ஷிப் முக்கியம்

ரோஹித் சர்மாவும் ரியான் ரிக்கல்ட்டும் அதேமாதிரிதான் விளையாடினார்கள். இது முற்றிலும் சிறப்பானது.

இதில் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதான் என்பதைப் பொறுத்ததல்ல, அந்தச் சூழ்நிலைக்கு என்ன தேவை என்பதே முக்கியமானது.

மக்கள் மீண்டும் தங்களது பேட்ஸ்மேன்ஷிப்புக்கு (திறமை, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆடுவது) திரும்புகிறார்கள். அணியாக நாங்கள் சரியான பேட்மேன்ஷிப்பில் விளையாடுகிறோம் என்றார்.

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அதிரடி: சன்ரைசர்ஸுக்கு 225 ரன்கள் இலக்கு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட... மேலும் பார்க்க

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; தோல்வியிலிருந்து மீளுமா?

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹ... மேலும் பார்க்க

சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட மும்பை வீரர்கள்..! ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இரு வீரர்கள் சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் (மே.1) மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்க... மேலும் பார்க்க

நாங்கள் பயப்படப் போவதில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர்

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறியது குறித்து அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் 5 முறை... மேலும் பார்க்க

இந்திய அணிக்காக விளையாடும் கனவை ஒருபோதும் கைவிடமாட்டேன்: அஜிங்க்யா ரஹானே

இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் கனவை ஒருபோதும் கைவிடமாட்டேன் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.இந்திய அணி வீரர்களில் ஒருவரான அஜிங்க்யா ரஹானே கடைசியாக கடந்த... மேலும் பார்க்க

மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன்..! 36 வயதில் ரஹானே நம்பிக்கை!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானே தான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளார். இந்திய அணிகயில் கடந்த 2023ஆம் ஆண்டு டெஸ்ட்டில் விளையாடிய அஜிங்க்யா ரஹானே... மேலும் பார்க்க