சிக்கல் கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம்
சிக்கல் அருள்மிகு நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழா பத்து நாட்கள் நடைபெறும். விழா தொடக்கமாக, கொடிமரத்துக்கு மஞ்சள், பால், தேன், சந்தனம், விபூதி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் கூற ரிஷப உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
விழாவில், தினந்தோறும் சிம்ம, ரிஷப, பூத என வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மணிகண்டன், தக்காா் ராஜா இளம் பெருவழுதி, ஆய்வாளா் சதீஷ் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.