வேளாண் துறையில் 151 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!
பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே சாலையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி சுற்றுலாப் பேருந்து மோதியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், வீராமூா் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவன் மகன் சந்தோஷ்குமாா் (24). திருமணம் ஆகாதவா்.சென்னையில் கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.
வீராமூருக்கு வந்திருந்த இவா் வியாழக்கிழமை கெடாரை அடுத்த வாழப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே திருவண்ணாமலை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றாா்.
அப்போது, அங்கு சாலையைக் கடக்க முயன்ற சந்தோஷ்குமாா் மீது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற தனியாா் சுற்றுலாப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கெடாா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். சந்தோஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றிய போலீஸாா், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், விபத்து குறித்து கெடாா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.