கடன் குறையும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மே 2 - 8) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
பொருளாதார நெருக்கடி குறையும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளால் தெளிவு ஏற்படும். நில விஷயங்களால் ஆதாயம் மேம்படும்.
உத்தியோஸ்தர்களுக்கு மந்தமான சூழல் நிலவும். வியாபாரிகளுக்கு லாபம் மேம்படும். விவசாயிகளுக்கு இருந்த இழுபறியான சூழல் மறையும்.
அரசியல்வாதிகளுக்கு பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு ஆதரவான சூழல் ஏற்படும். பெண்கள் மனதுக்கு விரும்பியவற்றை வாங்குவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறாமல் படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
யோசித்து எண்ணியதை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தோர் சாதகமாக இருப்பார்கள். புதிய தொழில்நுட்பங்களில் ஆர்வம் பிறக்கும். அரசு நிலைப்பாடுகளைப் புரிந்துகொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் புதிய வேலைகளுக்கு முயற்சிப்பீர்கள். வியாபாரிகள் திடநம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். விவசாயிகளுக்கு கருத்துவேறுபாடுகள் நீங்கும்.
அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விவாதங்களைத் தவிர்ப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். வாக்குறுதிகள் நிறைவேறும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் உரங்களுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும்.
அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் ஆன்மிகத்தில் நாட்டம் கொள்வீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
தொழில் தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். புதிய நண்பர்களுடன் விழிப்புடன் இருப்பீர்கள். ரகசியங்களைப் பகிர வேண்டாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் சிறக்கும். விவசாயிகள் கடன்களை அடைப்பீர்கள்.
அரசியல்வாதிகள் பேச்சில் கவனத்துடன் இருக்கவும். கலைத் துறையினரின் பொருளாதாரம் சீராக இருக்கும். பெண்கள் குடும்பப் பொறுப்புகளை ஏற்று நடத்துவீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
தற்பெருமைகளைக் குறைப்பது நல்லது. திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமைய வாய்ப்புண்டு. போட்டிகளைச் சந்திப்பீர்கள். அரசு சலுகைகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு உடன்பணிபுரிவோர் ஆதரவு உண்டு. வியாபாரிகள் கூட்டாளிகளிடம் கவனத்துடன் இருக்கவும். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம்.
அரசியல்வாதிகள் பொறுமையுடன் காரியமாற்றுவீர்கள். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்களுக்கு கணவருடன் அந்நியோன்யம் அதிகரிக்கும். மாணவர்கள் நற்பெயரை எடுப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
சிந்தனையில் தெளிவு பிறக்கும். செயல்களுக்குத் தடையாய் இருந்தவர்கள் விலகிவிடுவார்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். வருமானம் சீராக வரும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும்படி நடப்பார்கள். வியாபாரிகள் திட்டமிட்டு விற்பனையைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து மேம்படும்.
அரசியல்வாதிகள் மேலிடக் கட்டளையை நிறைவேற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு பாராட்டுகள் கிடைக்கும். பெண்கள் சரியான நேரத்தில் ஆகாரத்தை எடுப்பீர்கள். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
கடின வேலைகளைச் செய்வீர்கள். நிதானத்தைக் கடைப்பிடிப்பீர்கள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தோர் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் கவனமாகப் பழகவும். வியாபாரிகள் விற்பனையில் கூடுதல் கவனத்தைச் செலுத்துவீர்கள். விவசாயிகள் லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் உறவினர்களிடம் அனுசரணையாக இருக்கவும். மாணவர்கள் நல்ல நண்பர்களுடன் பழகவும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
பொருளாதார மேன்மையால் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வெளியூர் பயணங்களுக்குத் திட்டமிடுவீர்கள். கர்வம் இன்றி செயல்பட்டு, நற்பெயரை எடுப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை கூடும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடப்பீர்கள். வியாபாரிகள் எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். கலைத் துறையினரின் புகழ் உயரும். பெண்கள் சேமிப்பைக் கூட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - மே 2
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். கடன்கள் வசூலாகும். பேச்சுகளைக் குறைப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். விவசாயிகள் ஊடுபயிர்களால் லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் நற்பெயர் எடுப்பீர்கள். கலைத் துறையினர் நலிந்தோருக்கு உதவுவீர்கள். பெண்கள் பிறரிடம் கவனமாகப் பேசவும். மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க உதவித்தொகையை பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - மே 3, 4, 5.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
இழுபறியான காரியங்களைச் செய்வீர்கள். நுணுக்கமான விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தின் ஆதரவைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளைப் புரிந்துகொள்வீர்கள். விவசாயிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் தலைமையிடம் நற்பெயரை வாங்க முயற்சிப்பீர்கள். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்} மே 6, 7.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிர்வாகத் திறன் வெளிப்படும். உயர்பதவியில் இருப்போரின் ஆதரவு உண்டு. மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் இருந்த காலதாமதம் குறையும். வியாபாரிகளுக்கு முதலீடு மேம்படும். விவசாயிகள் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.
அரசியல்வாதிகள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைத் துறையினருக்கு அனுகூலமான சூழல் நிலவும். பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களிடம் இணக்கமான உறவு உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - மே 8,
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பணவரவு உண்டு. தொழிலில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பூர்விக சொத்துகளால் லாபம் கிடைக்கும். நெடுநாள் ஆசை நிறைவேறும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நம்பிக்கை மேம்படும். வியாபாரிகள் வியாபாரத்தை மேம்படுத்துவீர்கள். விவசாயிகளுக்கு அரசு விஷயங்களில் இழுபறி மறையும்.
அரசியல்வாதிகள் கட்சியில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் கவனம் சிதறாமல் பணியை முடிப்பீர்கள். பெண்கள் பிறரை அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் பயிற்சிகளைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம்- இல்லை.