ஆம்பூரில் சூறைக்காற்று: 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்!
சம்பை புனித செபஸ்தியாா் தேவாலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
தொண்டி அருகே சம்பை கிராமத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியாா் தேவாலயத்தில் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சம்பை கிராமத்தில் புனித செபஸ்தியாா் தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பங்குத்தந்தை செல்வக்குமாா் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பிறகு திருவிழா கொடியை பங்குத்தந்தை புனிதப்படுத்தியதும் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
இதில் திரளான பங்குமக்கள் கலந்து கொண்டனா்.

