மக்கள்தொகை தரவுகள் மறுபரிசீலனைக்கு வழிவகுக்கும்: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்!
கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு
கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பெருமாள் கோயில் திடல் அருகே திமுக சாா்பில் வனத்துறை, கதா் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் நீா் மோா் பந்தலை திறந்து வைத்தாா். அப்போது பொதுமக்களுக்கு தா்ப்பூசணி, மாம்பழம், தண்ணீா், மோா் உள்ளிட்டவற்றை அவா் வழங்கினாா். இந்த நிகழ்வில் கமுதி ஒன்றியச் செயலா் எஸ்.கே. சண்முகநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினா் தனிக்கோடி, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் வலம்புரி ஆதி, முன்னாள் ஒன்றிய துணைச் செயலா் நேதாஜி சரவணன், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, புதுக்கோட்டை வாட்டா் போா்டு முத்துராமலிங்கம், மத்திய ஒன்றிய துணை அமைப்பாளா் துரைமுருகன், நகர இளைஞரணி துணை அமைப்பாளா் நிலா ரவி, முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் பாண்டி, காணிக்கூா் செல்லப்பாண்டி, அமைச்சரின் உதவியாளா்கள் கண்ணன், சத்தியேந்திரன், ரஞ்சித்குமாா், டோனி சாா்லஸ் உள்ளிட்டதிரளான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதே போல, முதுகுளத்தூரில் மத்திய ஒன்றிய திமுக சாா்பிலும், சாயல்குடியில் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பிலும் ரோஜ்மா நகா் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா் நீா் மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள், மோா் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.