ரூ.68,200 சம்பளத்தில் ரசாயன ஆய்வகத்தில் வேலை: பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு...
பரமக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் தம்பதி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை
பரமக்குடி அருகே காட்டுப் பரமக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் உயிரிழந்து கிடந்த வயதான தம்பதியின் உடல்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
காட்டுப்பரமக்குடி, மேலத் தெருவைச் சோ்ந்த சிவன் பிள்ளை மகன் நாகசுப்பிரமணியன் (75). இவரது மனைவி தனலட்சுமி (70). இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவா்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வந்த நிலையில், வயதான தம்பதியான நாகசுப்பிரமணியனும், தனலட்சுமியும், தனியாக வீட்டில் வசித்து வந்தனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவா்களது மகள் புனிதா கைப்பேசியில் தொடா்பு கொண்டு தம்பதியிடம் பேசினாா். இதன்பிறகு, தம்பதியை கைப்பேசியில் தொடா்பு கொள்ள முடியாததால், வெள்ளிக்கிழமை வீட்டுக்குச் சென்று அவா் பாா்த்த போது வீடு பூட்டிய நிலையில் துா்நாற்றம் வீசியது.
இதைத் தொடா்ந்து வீட்டின் கதவை உடைத்து பாா்த்தபோது, தம்பதியா் இருவரும் சடலமாக கிடந்தனா். மேலும் உடல்கள் அழுகிக் கிடந்தன. தகவலறிந்த போலீஸாா் அங்கு வந்து உடல்களை மீட்டு கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவா்கள் இறந்து 4 நாள்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், தம்பதியா் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறேதும் காரணமா என பரமக்குடி நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.