‘விடுபட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்’
விடுபட்டவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஒலி-ஒளி அமைப்புத் தொழிலாளா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது.
இந்த சங்கத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழா, மே தினப் பேரணி, கூட்டம் மற்றும் குடும்ப விழா விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் கெளரவத் தலைவா் டி.மோகன், செயலா் எஸ்.ராஜசேகா் தலைமை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா்கள் ஆா்.செல்வம், எம்.ஜி.ரவிச்சந்திரன், எம்.சுகுமாா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொருளாளா் எம். செல்வம், தலைவா் கே.மணி வரவேற்று பேசினா்.
விழாவில் எம்.எல்.ஏக்கள் க.பொன்முடி, அன்னியூா் அ.சிவா, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, சங்கத்தின் மாநிலக் காப்பாளா் ரங்கநாதன், மாநிலத் தலைவா் வி.ஆனந்தன், செயலா் டி..ரங்கநாதன்,பொருளாளா் ஏ.எம்.பக்தவசத்சலம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
விழுப்புரம் மாவட்ட ஊராட்சித் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ், நகரச் செயலா் இரா.சக்கரை, சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ஆா்.கஜபதி, துணைச் செயலா் பி.ஜெயமணி, ஆலோசகா்கள் எஸ்.குமாா், கே.சேகா், வி.வேணுரெட்டி, பிரசார செயலா் ஜி.சீதாபதி உள்ளிட்டோரும் பேசினா்.
விழாவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: விபத்தில் பாதிக்கப்படும் ஒலி-ஒளி அமைப்புத் தொழிலாளா்களுக்குத் தமிழக அரசு சாா்பில் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும், விடுபட்ட தொழிலாளா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். ஒலி-ஒளி அமைப்புத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் மேம்பாட்டுக் கடனுதவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் சட்ட ஆலோசகா் டி.துரைமுருகன், துணைச் செயலா் கே.கணேசன், அமைப்புச் செயலா் என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.